Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2018 டிசெம்பர் 18 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையை பயன்படுத்தி பெரும்பான்மையினத்தை சேர்ந்த 46 பேருக்கு வடமாகாணத்தில் நியமனம் வழங்கப்பட்டு உள்ளது.
நாட்டில் 50 நாட்களாக அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டு இருந்தது. அதன்போது பிரதமராக அறிவிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் அமைச்சரவை ஒன்று உருவாக்கப்பட்டு இருந்தது. அதில் எரிபொருள் மின் சக்தி அமைச்சராக நியமிக்கப்பட்ட சியம்பலாப்பிட்டிய கேகாலை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த நியமனங்களை வழங்கியதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவிக்கையில்,
கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற அரசியல் குழப்பங்களைப் பயன்படுத்தி வடக்கு மாகாணத்தில் இலங்கை மின்சார சபையில் காணப்பட்ட வெற்றிடங்களுக்கு தெற்கு இளைஞர்களை நியமனம் செய்துள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக க.பொ.த உயர்தர கல்வி தகுதி உடையவர்களுக்கு வழங்க கூடிய வெற்றிடங்களை க.பொ.த. சாதாரண தர கல்வி தகுதிடையவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த வெற்றிடங்களிற்கு எமது மாகாண இளைஞர்களை நியமனம் செய்யுமாறு நாம் நீண்டகாலமாக கோரி வந்த நிலையில், அந்த வெற்றிடங்களிற்கு இவ்வாறு இரகசியமான முறையில் எந்த விண்ணப்பமும் கோராமல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நியமனம் செய்யப்பட்ட அனைவருமே கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கண்டறிந்துள்ளோம்.
எனவே அரசியல் குழப்ப நிலை காணப்பட்ட கால பகுதியில் வழங்கப்பட்ட நியமனங்களை இரத்து செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அபிவிருத்தி செயலணியின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளதாக மேலும் தெரிவித்தார்.
அதேவேளை, அரசியல் குழப்ப நிலை காணப்பட்ட வேளை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா, நியமனங்கள் எவையும் வழங்கப்பட கூடாது என உத்தரவிட்டிருந்த போதும், அதனையும் மீறியே குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
35 minute ago
59 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
59 minute ago
3 hours ago
7 hours ago