2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

’அரசியல்வாதிகளின் படங்கள் அகற்றப்படும்’

Editorial   / 2020 ஜூன் 17 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணத்தில் உள்ள பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் பதாகைகள், கம்பரெலியா பதாதைகளில் உள்ள அரசியல்வாதிகளின் படங்கள் ஆகிவற்றை அகற்றுவதற்கு, பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனவென, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

அத்துடன், வீதிகளில் வேட்ப்பாளர்களின் பெயர்களை வரைவது, தேர்தல் சட்டத்துக்குவிரோதமான செயற்பாடெனவும் இதனை மீறுபவர்கள் மீது தேர்தல் சடடத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவர் கூறினார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பதாகைகள் பொது இடங்களில் காணப்பட்டால், அவற்றை உடனடியாக அகற்றுமாறு, பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதென்றார்.

மேலும், யாழ்ப்பாணத்தில் கம்பரெலிய திட்டத்தின் போது நடப்பட்டுள்ள பதாகைகளில் உள்ள அரசியல்வாதிகளின் படங்களை, ஸ்டிக்கர் ஊடாக மறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதெனவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X