Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 16 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம், அரியாலை, மணியம் தோட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட விசேட அதிரடிப்படையினர் இருவரையும், தொடர்ந்தும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் எஸ். சதீஸ்கரன், இன்று (16) உத்தரவிட்டார்.
இதேவேளை, அவர்கள் நேற்று அடையாள அணிவகுப்பில் ஈடுப்படுத்தப்பட்ட போதிலும், அவர்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கி சூட்டின்போது பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சைக்கிளும் முச்சக்கரவண்டியும், நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டது.
அத்துடன், சந்தேகநபர்கள் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, இறந்தவரின் உடலில் இருந்து கைப்பற்றப்பட்ட இரத்தக்கறை மற்றும் இரத்த கறை படிந்த உடைகள் போன்றவற்றை இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக, மன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதேவேளை, சந்தேகநபர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பமானது மன்றினால் நிராகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
33 minute ago
40 minute ago
1 hours ago