Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன், என்.ராஜ்
யாழ்ப்பாண மாவட்டத்தில், சிறு குற்றம் புரிபவர்கள் பொலிஸாரிடம் இருந்து விடுதலையாவதற்கு மணல் கடத்தல்காரர்களையே அணுகுகின்றனரெனத் தெரிவித்த யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ரெமிடியஸ், அந்தளவுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸாருக்கும் மணல் கடத்தல்காரர்களுக்கும் இடையில் நெருக்கம் உள்ளதெனவும் கூறினார்.
அத்துடன், அரியாலையில் கடமையில் உள்ள அனைத்து பொலிஸாரையும் உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும், அவர் வலியுறுத்தினார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு, வாள் வெட்டுகள், கொள்ளை ஆகிவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இன்று (24) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் சேனாரட்ன, யாழ்ப்பாணத்தில் வாழுகின்ற சாதாரண மக்களுக்கு மணல் தேவையாக உள்ளதாகவும் மணல் கடத்தலில் ஈடுபடும் மாபியாக்களைப் பிடிக்க வேண்டுமெனவும் கூறினார்.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago