Editorial / 2022 டிசெம்பர் 01 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் ரயிலுடன் மினிவான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் வான் சாரதி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
அரியாலையை சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அரியாலை ஏ.பி வீதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஏ.பி. வீதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில், ரயிலுடன் மினிவான் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த கடவையில் பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்று உயிரிழப்புக்கள் ஏற்பட்ட போதிலும் அதனை பாதுகாப்பான கடவையாக மாற்ற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் இன்றைய விபத்து சம்பவத்தினை அடுத்து விசாரணைகளை முன்னெடுக்க வந்திருந்த பொலிஸாருடன் அப்பகுதி மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
5 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
09 May 2026
09 May 2026