Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்ஷ
ஈரோஸ் அமைப்பின் நிறுவுனர்களில் ஒருவராகவும், தமிழர் அரசியல் சார்பான ஆய்வு நூல்கள் பலவற்றின் ஆசிரியராகவும் விளங்கி அண்மையில் காலமான 'அருளர்' எனப் பரவலாக அறியப்படும் அருட்பிரகாசத்தின் நினைவேந்தல் நிகழ்வு, யாழ். முகாமையாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், நல்லூரிலுள்ள யூரோவில் மண்டபத்தில், நேற்று (21) நடைபெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், பொறியியலாளர்களான மார்க்கண்டு ராமதாஸ், எம். தில்லைநாதன், பிரபல கவிஞரும் அரசியல் - சமூகச் செயற்பாட்டாளருமான சி.கருணாகரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா, ஜே.வி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர், தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் தி.சிறீதரன்(சுகு தோழர்), யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடத் துறைத் தலைவரும் சிரேஷ்ட பேராசிரியருமான இரா.சிவச்சந்திரன், அருளரின் மகள் கல்யாணி அருளர், அருளரின் சகோதரன் இராஜநாயகம், வடக்கு கிழக்கு மாகாண சபையின் மனித வள மேம்பாடும் அபிவிருத்தியும் பிரிவின் முன்னாள் பிரதிச் செயலாளரும் யாழ்.முகாமையாளர் சம்மேளனத்தின் செயலாளருமான சிவசிதம்பரம் கிருஸ்ணானந்தன், அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம், யாழ். முகாமையாளர் சம்மேளனத்தின் இணைப்பாளர் வி. நிரஞ்சன் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago