2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

’அர்த்தம் தேடும் செயற்பாட்டில் ஈடுபடுங்கள்’

Yuganthini   / 2017 ஜூன் 29 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எமது இனம் வாழ வேண்டும் என்பதற்காக விதைக்கப்பட்ட எத்தனையோ உயிர்களுக்கு அர்த்தம் தேடும் வகையிலேயே, எம்முடைய  செயற்பாடுகளும் அமைந்திருக்க வேண்டும்” என்று, வடமாகாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

கிராம அபிவிருத்தி திணைக்களத்தின், மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் அமைக்கப்பட்டவுள்ள வளங்களினாலான கைவினை உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலையம், இன்று (29) காலை, வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவத்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்:-

“மன்னார் பிரதேசத்தில், மதப்பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றன. எனவே, அவற்றை ஒரு பக்கம் தூக்கியெரிந்துவிட்டு, மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

“குறிப்பாக, எம்முடை இனம் வாழவேண்டும் என்பதற்காக, கடந்த காலங்களில், எத்தனையோ உயிர்கள் விதைக்கப்பட்டுள்ளது. விதைக்கப்ப ட்ட உயிர்களுக்கு அர்த்தம் தேடும் வகையில்தான் நம்முடைய செயற்பாடுகள் அமைந்திருக்க வேண்டும்.

“எனவே, ஒவ்வொரு கிராமங்களும் அபிவிருத்தியை நோக்கியே  நகர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி, ஐந்து மாவட்டங்களினது தேவைகளைப் பொருத்தே ஒதுக்கப்பட்டு வருகின்றன” என்று அவர் மேலும் கூறினார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X