Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை பிரிவுகள், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் உத்தரவுக்கு அமைவாக, யாழ்ப்பாணம் சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளினால் நேற்று (27) சீல் வைத்து மூடப்பட்டுள்ளன.
அண்மையில், யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 10 நோயாளர்களுக்கு திடீர் கிருமி தொற்றுக்கு உள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட குறித்த 10 நோயாளர்களினதும் கண்களில் நோய்த்தாக்கம் அதிகமாக காணப்படுவதால் பலரது கண்கள் முழுமையாக அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த தனியார் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப்பிரிவில் நோய்த்தொற்று ஏற்பட்டமைக்கான காரணத்தை அறிந்து கொள்ள விசேட நிபுனர் ஒழு ஒன்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
59 minute ago
2 hours ago
3 hours ago