2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அலைபேசியை அபகரித்த இருவர் கைது

Gavitha   / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் வீதியால் சென்ற இளைஞனை தாக்கி 35 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசியை அபகரித்த சந்தேக நபர்கள் இருவரை வேம்படிசந்தி பகுதியில் வைத்து சனிக்கிழமை (20) கைது செய்துள்ளதாக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான இருவரும் அரியாலை பகுதியைச் சேர்ந்த நபர்கள் என்று தெரிவித்த பொலிஸார் இச்சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த புதன்கிழமை (17) துவிச்சக்கரவண்டியில் சென்றுக் கொண்டிருந்த குறித்த இளஞனை, முச்சக்கரவண்டியில் பின் தொடர்ந்த சந்தேக நபர்கள், ஆள் நடமாட்டமில்லாத நேரத்தில் குறித்த இளைஞனை தாக்கி, அவரிடமிருந்த அலைபேசியை அபகரித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞன், முச்சக்கரவண்டியின் இலக்கத்தகட்டிலுள்ள இலக்கத்தை குறித்துக்கொண்டு, தனது அலைபேசி அபகரிக்கப்பட்டமை குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்தே, சந்தேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X