2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

‘அளவீட்டுப் பணிகள் 25இல் நிறைவுறும்’

Editorial   / 2017 நவம்பர் 15 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

“கிளிநொச்சி - இரணைதீவினுடைய காணிகளை அடையாளப்படுத்தி அளவீடு செய்யும் நடவடிக்கைகள், எதிர்வரும் 25ஆம் திகதியே நிறைவடையும்” என்று, பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஷ்னேந்திரன் தெரிவித்தார். 

இரணைதீவு, இதுவரை விடுவிக்கப்படாது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதால், இங்கே வாழ்ந்த குடும்பங்கள் இதுவரை மீள்குடியேற அனுமதிக்கப்படாத நிலையில், முழங்காவில் - இரணைமாதாநகர் பகுதியில் வாழ்ந்து வருகின்றன. 

இந்நிலையில், தமது பூர்வீக நிலத்தை விடுவிக்கக்கோரி, கடந்த ஏழு மாதங்களாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே கடற்படையினர் இணங்கிக்கொண்டதற்கு அமைய, பொதுமக்களின் காணிகளை அடையாளப்படுத்தி அளவீடு செய்யும் நடவடிக்கைகள், கடந்த மாதம் முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .