Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2021 மே 16 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை, இராணுவத்தினர் அழித்தாலும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தாங்கள் நடத்துவொமென்று, இலங்கைத் தமிழரசிக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில், நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், இவ்வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை. தற்போதுள்ள கொரோனா நிலைமையை அனுசரித்து, சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொண்டு, மிக அவதானமாக செயற்படுத்துவதற்கு தயாராக இருக்கிறோமென்றார்.
ஏற்கெனவே போரால் பலர் உயிரிழந்ததை போல், வடக்கில் அவ்வாறான நிலை மீண்டும் ஏற்பட்டுவிடகூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கின்றோமெனவும், அவர் கூறினார்.
'எனவே, இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வழமை போன்று நாம் அனைவரும் ஒன்றுபட்டு நினைவு கூருவோம். அத்தோடு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூர ஆயர்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளமையானது, தமிழ்த் தேச மக்களுக்கு ஓர் எழுச்சிமிக்கதாக காணப்படுகின்றது' எனவும், மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago