2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

‘அழுத்தங்களே இராஜினாமாவுக்கு காரணமாகும்’

Editorial   / 2020 ஜூலை 21 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

அழுத்தத்தங்களாலேயே, சட்ட பீட முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், தனது விரிவுரையாளர் பதவியை இராஜினாமா செய்தாரென, யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் லூ.அனுஷன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில், இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணப் பல்கலைகழகம் தனது சுயாதீனத்தை இழந்து நிற்பதாகவும் அதனாலேயே, சட்டபீட முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி கு. குருபரனுக்கு அழுத்தம் கொடுத்து, நிர்ப்பந்தித்து அவரை இராஜினாமா செய்ய வைக்கப்பட்டதெனவும் சாடினார்.

அரசாங்கத்துக்கு எதிரான வழக்குகள் செய்தமையால் தான், அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டதெனவும், அனுஷன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X