Simrith / 2023 செப்டெம்பர் 19 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்ரேலியாவிற்கு அனுப்புவதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரிடம் 75 இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த கொழும்பைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், " அவுஸ்ரேலியா செல்ல விருப்பமா ? " என வந்த விளம்பரத்தை பார்த்து
நம்பி, அந்த விளம்பரத்தில் இருந்த தொலைபேசி இலக்கத்துடன் உரையாடியுள்ளார்.
அவர்களும் நம்பிக்கை தரும் வகையில் அவருடன் உரையாடி , ஆசிரியரிடம் இருந்து கட்டம் கட்டமாக 75 இலட்ச ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர்.
நீண்ட நாட்களாக தனது அவுஸ்ரேலியா பயண ஏற்பாடுகள் நடைபெறாததால் , சந்தேகம் அடைந்த ஆசிரியர் , யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் முறையிட்டார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , கொழும்பைச் சேர்ந்த நபரை கைது செய்து, யாழ்ப்பாணம் அழைத்து வந்து விசாரணைகள் நடாத்திய பின்னர் நேற்று திங்கட்கிழமை (18) நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
அதேவேளை, குறித்த நபரினால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேலும் சிலரும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
18 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago