2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியர் சங்கமும் போராட்டத்தில் குதிப்பு

George   / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை  ஆசிரியர் சங்கத்தினர்,  தமது கோரிக்கைகளுக்கு  தீர்வு கிடைக்கும் வரை தொடர்ச்சியான போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 9.30 மணியளவில்,  செம்மணி வீதியில் அமைந்துள்ள  வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் அலுவலகத்துக்கு முன்பாக, ஆசிரியர் சங்கதினர் இந்த தொடர் ​போராட்டத்தை ஆரம்பித்தனர்.

“வடமாகாண கல்விப் பணிப்பாளரின் முறைகேடுகள் விசாரிக்கப்படவேண்டும், பணித்தடை வழங்கப்பட்ட 3  ஆசிரியர்களை மீள இணைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும், செயலாளரை தாக்கியதாக கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சரின் செயலகம் பதிலளிக்க வேண்டும், முறையான  இடமாற்றதினை நடைமுறைப்படுத்த வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X