Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூன் 22 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த்
வடமாகாண சபையின் ஆசன ஒழுங்கில், மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற சபையின் விசேட அமர்வின் பின்னர், அன்றிரவு அவைத்தலைவர், மூன்று அமைச்சர்கள் உட்பட ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் 16 பேருடன், ஆளுநரை சந்தித்து, முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளித்தார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக காணப்பட்ட பரபரப்பு, நேற்று (21) மாலை முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீள பெறப்பட்டதையடுத்து, தணிந்தது.
எனினும், அவைத்தலைவர் நடுநிலை தவறி விட்டதாகவும் அது தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன். இன்றைய (22) சபையில் குறித்த விடயம் எடுத்துக்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (22), மாகாண சபை அமர்வு ஆரம்பமாகியது.
எனினும், கடந்த 1 வாரமாக இடம்பெற்று வந்த பரபரப்புகளின் அடையாளமே இல்லாது, மிக சுமூகமாக முறையில் அமர்வு இடம்பெற்றது.
அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், சபை அமர்வை ஆரம்பித்தவுடன், நகை அடகு நியதி சட்டம் தொடர்பான குழு விவாதத்தை ஆரம்பித்து சபை அமர்வுகள் மிக அமைதியான முறையில் நடைபெற்று வந்தது.
இதன்போது, எந்த ஒரு உறுப்பினரும், கடந்த கால அரசியல் குழப்பங்கள் தொடர்பில் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
இதேவேளை, அமைச்சர்கள் இருவர் தமது பதவிகளை இராஜினாமா செய்ததை அடுத்து, சபையில் ஆசன ஒழுங்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில், சபையின் முன் ஆசனங்கள் முதலாவதாக முதலமைச்சர், கல்வி அமைச்சர், சுகாதார அமைச்சர், விவசாய அமைச்சர், மீன் பிடி அமைச்சர், பிரதி அவைத்தலைவர் எனும் ஒழுங்கில் அமைந்திருந்தது.
ஆனால்,இன்றைய அமர்வில் முதலமைச்சர், சுகாதார அமைச்சர், மீன் பிடி அமைச்சர், பிரதி அவைத்தலைவர், முன்னாள் கல்வி அமைச்சர், முன்னாள் விவசாய அமைச்சர் என, ஆசன ஒழுங்கு மாற்றி அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
18 minute ago
1 hours ago
9 hours ago
27 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
9 hours ago
27 Sep 2025