2025 மே 14, புதன்கிழமை

ஆசிரியரிடம் வழிப்பறி கொள்ளை

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

பாடசாலை முடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆசிரியரின் தாலிக்கொடி மற்றும் சங்கிலி என்பவற்றை, பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர். 

திருநெல்வேலி பகுதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவர் நாவற்குழி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்து வருகின்றார்.

நேற்றைய தினம், வழமை போன்று பாடசாலை முடித்து, திருநெல்வேலியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த வேளை, செம்மணி பகுதியில், பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு கொள்ளையர்கள் ஆசிரியரை வழிமறித்து தாலிக்கொடி மற்றும் சங்கிலி என்பவற்றை அறுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இதேவேளை, நல்லூர் - செம்மணி வீதியில் மதியம் மற்றும் இரவு நேரங்களில் வீதியில் ஆள்நடமாட்டம் குறைவாக காணப்படும் வேளைகளில் வீதியில் பயணிப்போரிடம் அப்பகுதியில் நடமாடும் வழிப்பறி கொள்ளையர்கள், வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் பலரும் பொலிஸாருக்கு அறிவித்த நிலையிலும், பொலிஸாரால் வழிப்பறி கொள்ளையர்களை கைதுசெய்ய முடியவில்லை என குற்றம் சாட்டப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X