2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியரின் வீட்டில் திருட்டு

எம். றொசாந்த்   / 2019 ஜூன் 05 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.மூளாய் பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் 11 பவுண் நகைகளை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

மூளாய் கூட்டறவு வைத்தியசாலைக்கு அருகில் உள்ள குறித்த வீட்டினுள் திங்கட்கிழமை (03) இரவு உட்புகுந்த திருடர்கள் வீட்டினுள் சல்லடை போட்டு தேடி 11 பவுண் நகைகளை திருடியுள்ளனர்.

பின்னர் அருகில் உள்ள வீட்டினுள் திருடும் நோக்குடன் உட்புகுந்த வேளை வீட்டில் இருந்தோர் கூக்குரலிட திருடர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .