2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆசிரியர்களுக்கான செயலமர்வு

Freelancer   / 2023 மே 01 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் 45 பேருக்கு, “உள நலம் மற்றும் உள சமூகம் சார் சேவைகள்” எனும் எனும் தொனிப்பொருளில்,12 நாட்கள் செயலமர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

USAID நிறுவனத்தின் நிதியுதவியுடன், சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்க செயற்பாடு (SCORE) திட்டத்தின் கீழ், குடும்ப புனர்வாழ்வு நிலையத்தால் இச்செயலமர்வு நடத்தப்பட்டது.

பாடசாலை மட்டங்களில் காணப்படும் பிரச்சினைகளை இனங்கண்டு, அதனை முறையாக தீர்ப்பதற்காக வழிகாட்டலும் ஆலோசனையும் எனும் குறித்த செயலமர்வில் கவனம் செலுத்தப்பட்டன. 

இவர்களுக்கான12 நாள் செயலமர்வின் இறுதி நாள் செயலமர்வு, வட்டக்கச்சியில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சியின் பின்னர் தங்கள் பாடசாலைகளில் இவர்கள் செயற்பட தேவையான மேலதிக  உதவிகள் வழங்கப்படவுள்ளன.

குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் ஒழுங்கமைப்பில் மாகாண கல்வி அமைச்சின் நெறிப்படுதலில், இந்தச் செயற்றிட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .