Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.ஜெகநாதன்
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் குழு, அங்கு வசித்த நடன ஆசிரியையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தி; விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் இன்று (30) பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் வந்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குழு, ஆசிரியையை வாளால் வெட்டியுள்ளது.
அதனைத் தடுக்கச் சென்ற ஆசிரியையின் தாயாரையும் குறித்த இளைஞர் குழு வெட்டிக்காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
சம்பவத்தையடுத்து அயலவர்கள் இருவரையும் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .