2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியைக்குத் தொந்தரவு: குடும்பஸ்தருக்குப் பிணை

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

ஆவரங்கால் சர்வோதாய பகுதியில், ஆசிரியை ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான குடும்பஸ்தரை 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பிணையில் விடுவித்த மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஆனந்தராஜா, வழங்கை செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

ஆவரங்கால் - சர்வோதயா பகுதியில் வசித்து வரும் ஆசிரியை ஒருவருக்கு அதே பகுதியினை சேர்ந்தவரும் அருகில் வசிப்பவருமான 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இது  தொடர்பில் ஆசிரியை கிராமசேவையாளர் ஊடாக பிரச்சினையை முடித்து வைக்க முயற்சித்த போதும், குறித்த நபர் தொடர்ச்சியாக ஆசிரியை குளிப்பதனை பார்த்து வந்துள்ளார்.

இது தொடர்பில் பின்னர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அச்சுவேலி பொலிஸார் உரியமுறையில் விசாரணையினை முன்னெடுக்காத நிலையில், தொடர்ச்சியாக மன உளைச்சலுக்குள்ளான ஆசிரியை, காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிராகாரம் கடந்த வெள்ளிக்கிழமை குறித்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை அன்றையதினம் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்திய போது, 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பிணையில் விடுவித்த நீதவான், வழக்கை ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X