2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

செல்வநாயகம் கபிலன்   / 2018 பெப்ரவரி 06 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வல்வெட்டித்துறை மயிலியதனை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (06) காலை மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மயிலியதனை பகுதியைச்சேர்ந்த தவராஜசிங்கம் அனுசாந்தன் (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரவு வழமைபோல், உணவு உண்டுவிட்டு படுக்கைக்குச் சென்றவர், காலை எழுந்திருக்கவில்லை. உறவினர்கள் எழுப்பியபோது, உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, உறவினர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம், உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .