Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 பெப்ரவரி 05 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறையில் வைத்து, தன்னை தலைகீழாக தூக்கி, அடித்து சித்திரவதைக்கு உள்ளாகினர் என மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ்.பல்கலைக்கழக மாணவன், முறைப்பாடு செய்துள்ளார்.
மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் , கருணாகரன் நிதர்சன் எனும் மாணவன் திங்கட்கிழமை (05) முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவிக்கையில் ,
“வட்டுக்கோட்டை மாவடி பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் என்னை வழிமறித்து, தான் மறிக்கும் போது ஏன் மோட்டார் சைக்கிளை நிறுத்தவில்லை என என்னுடன் முரண்பட்டார்.
அதற்கு நான் நீங்கள் மறித்ததை கவனிக்கவில்லை. எனக் கூறினேன். அதன்பின்னர் ஆவணங்களை கேட்டார். ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன எனக்கூறி? அவற்றை எடுத்து கொடுத்த போது , அதனை வாங்கி பார்க்காது , மேலதிக பொலிஸாரை அவ்விடத்திற்கு வரவழைத்தார்.
அதன் போது , சிவில் உடையில் வந்த 7க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் எவ்வித விசாரணைகளும் இன்றி என்னை வீதியில் வைத்து கடுமையாக தாக்கினார்கள். என்னை தாக்கும் சம்பவம் அருகில் உள்ள கடையில் கண்காணிப்பு கமராக்களில் கூட பதிவாகியுள்ளது. அத்துடன் நானும் எனது கைபேசியில் என்னை தாக்குவதனை காணொளி எடுத்தேன்.
பின்னர் என்னை பொலிஸ் வாகனத்தில் ஏற்றி சென்று, பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறைக்குள் அழைத்து சென்று என்னுடைய ஆவணங்கள் , மற்றும் கைபேசி என்பவற்றை பறித்தார்கள்.
கைபேசியின் இரகசிய குறியீட்டை கேட்ட போது , அதனை தர முடியாது என மறுத்த போது , என் கால்களை பிடித்து தலைகீழாக தூக்கி கடுமையாக தாக்கினார்கள்.
என் ஆணுறுப்பை குறிவைத்தும் கடுமையாக தாக்கினார்கள். இதனால் எனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. வியர்க்க தொடங்கியது. அதனையடுத்து என்னை அறையில் இருந்து, வெளியே அழைத்து வந்து கதிரையில் அமர வைத்து விட்டு சென்று விட்டார்கள்.
பின்னர் நான் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறி வந்தேன். என்னை பொலிஸாரின் இரகசிய அறைக்குள் அழைத்து சென்றதனை , பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் ஞாயிற்றுக்கிழமை (04) தடுத்து வைக்கப்பட்டு இருந்த மூவர் கண்டார்கள்.
அறைக்குள் வைத்து ,அடிக்கும் போது , நான் எழுப்பிய அவலக்குரல் அவர்களுக்கும் கேட்டு இருக்கும். அடித்த பின்னர் என்னை கைத்தாங்கலாக பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அழைத்து வந்து கதிரையில் அமர வைத்ததையும் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மூவரும் நேரில் கண்டார்கள்.
எவ்வித குற்றமும் இழைக்காத என்னை சிவில் உடை தரித்த பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்கி சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். என்னை கொலை செய்யும் நோக்குடன் என் ஆணுறுப்பை குறித்து வைத்தும் தாக்கினார்கள்.
இந்நிலையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளமையால் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
எம்.றொசாந்த் , நிதர்ஷன் வினோத்
17 minute ago
21 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
33 minute ago
2 hours ago