2025 மே 15, வியாழக்கிழமை

’ஆதன வரியை செலுத்துவோருக்கு விசேட கழிவுகள் வழங்கப்படும்’

Editorial   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

2020ஆம் ஆண்டுக்கான ஆதன வரியை, ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவோருக்கு வருட மொத்த வரியில், 10 சதவீதம் கழிவு வழங்கப்படுமென, வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தி.நிரோஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், 2020ஆம் ஆண்டுக்கான ஆதன வரியை, கோப்பாய், நீர்வேலி, உரும்பிராய், அச்சுவேலி ஆகிய உப அலுவலகங்களில் செலுத்தி, சபையின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவோருக்கு வருட மொத்த வரியில் 10 சதவீதம் கழிவு வழங்கப்படுமெனத் தெரிவித்த அவர், ஒவ்வொரு காலாண்டுக்கும் உரிய வரியை, அந்தந்தக் காலாண்டின் முதல் மாத முடிவுக்குள் செலுத்துவோருக்குக் காலாண்டு வரியில் 5 சதவீதக் கழிவு வழங்கப்படுமெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .