2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு, வடமாகாண சபை வலியுறுத்தல்

Editorial   / 2018 மார்ச் 27 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாணசபையின் 119ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவை செயலகத்தில் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று (27) இடம்பெற்று வருகின்றது.

இதன்போது அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவைத்தலைவர் தெரிவித்தார்.

அத்துடன் இதனை வலியுறுத்தும் விதமாக வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட விசேட பத்திரம் ஒன்றில் சகல உறுப்பினர்களும் கையெழுத்திட்டதுடன் அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .