2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் அட்டகாசம்

Niroshini   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், அளவெட்டிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் ஞாயிற்றுக்கிழமை (27) இரவு, ஆயுதங்களுடன்; உள்நுழைந்த குழுவொன்று, வீட்டிலுள்ள பொருட்களை அடித்து நொருக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

துப்பாக்கி, வாள், இரும்புக் கம்பிகள், பொல்லுகளுடன் 4 மோட்டார் சைக்கிள்களில் சென்ற குழுவொன்று, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கியுள்ளது.

வீட்டிலிருந்தவர்கள், அவலக்குரல் எழுப்பியதையடுத்து, அயலவர்கள் ஒன்றுகூடியதும் அக்குழு, அங்கிருந்து தப்பிச் சென்றது.

இது தொடர்பில், சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X