2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

ஆரிய குளத்தில் விபத்து: இளைஞன் உயிரிழப்பு!

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம். றொசாந்த்

யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை - அல்வாய் பகுதியை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

அல்வாய் தெற்கைச் சேர்ந்த இந்திரசிங்கம் நிருபன் (வயது 32) என்ற இளைஞரே உரிரிழந்தவர் ஆவார்   

ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் அரச நிறுவனம் ஒன்று பணிபுரிந்து வரும் குறித்த இளைஞர் தனது பணி நிமிர்ந்தம் இன்று அதிகாலை சென்ற சமயம் குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இவ்விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .