2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

ஆறாவது பட்டமளிப்பு விழா

Freelancer   / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தோடு, தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடாத்திய வட மாகாணத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள பூமாரி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்றது.

நிகழ்வில், இளங்கலைமாணி தமிழியல் சிறப்பு பட்டம் பெற்ற 107 மாணவர்களுக்கு பட்டங்களை யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறை தலைவர் பேராசிரியர் சி.ரகுராம் வழங்கிவைத்தார்.

மேலும், தமிழியல் மேற்பட்டய கற்கையை மேற்கொண்ட 91 மாணவர்களுக்கான சான்றிதழ்களும், பட்டய கற்கையை மேற்கொண்ட 87 மாணவர்களுக்கான சான்றிதழ்களும்   வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது, இளங்கலைமாணி தமிழியல் சிறப்பு தேர்வில் முதல் நிலையுடன் சிறப்பு தேர்ச்சி பெற்ற நால்வருக்கு “இராஜராஜ சோழன் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்வில், யாழ் பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறை தலைவர் பேராசிரியர் கலாநிதி சி.ரகுராம், வடமாகாண சிரேஷ்ட சமூதாய சீர்திருத்த உத்தியோகத்தர் மொகமட் அன்வர் மொகமட் அனஸ், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வடக்கு மற்றும் மத்திய மாகாண இயக்குநர் இ.கோபிகிருஷ்ணா, பாரதி இன்ரிரியூட் இயக்குநரும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வட மாகாண இணைப்பாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான க.ரஜனிகாந்தன், நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்புநிலைய உரிமையாளர் வை.சிவராசா ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X