2025 மே 22, வியாழக்கிழமை

ஆலயத்துள் வாள்வெட்டு : இருவர் படுகாயம்

Editorial   / 2018 மே 08 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா 

நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் ஆலயத்துள் இருந்த இருவர் மீது நேற்று (07) இரவு வாள்வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அதே இடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொலிஸாரல் தேடப்பட்டுவரும் ஆவா குழுவின் முக்கியஸ்தர் வினோத் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டது என பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X