Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 நவம்பர் 02 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக, இன்று (02) காலை, கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, யாழ். மாவட்டத்தில், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆகியோர் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நீதி கோரி, கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், வலிகாமம் வடக்கு பகுதியில், நல்லாட்சி அரசாங்கத்தின் போது, தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் முதல் கட்ட நிதி மட்டுமே பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலதிகமான நிதி வசதிகள் இன்றுவரை, மக்களுக்கு வழங்கப்படவில்லை.
எனவே பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றிணைந்து, மாகாண ஆளுநர் செலயகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட இணைப்பாளர் எஸ். பிரபாகரன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .