2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

’ஆவா’ அட்டகாசம்; சிறுவன் உட்பட இருவர் காயம்

Editorial   / 2018 ஜூலை 04 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

யாழ்ப்பாணம் - சுன்னாகம் மற்றும் கொக்குவில் ஆகிய பிரதேசங்களில், நேற்று (03) இரவு, ஆவா குழுவினரின் வாள் வெட்டுக்கு இலக்காகி, 15 வயது சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

சுன்னாகம் பகுதியில் உள்ள தனுரொக் குழுவின் உறுப்பினர் ஒருவருடைய வீடொன்றுக்குள் புகுந்த ஆவாக் குழுவினர், அங்கிருந்தவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில், வீட்டில் இருந்த 15 வயது சிறுவன் வாள்வெட்டுக் காயங்களுக்குள்ளானார்.

இதேவேளை, கொக்குவில் பகுதியில், வீதியில் நடந்துச் சென்ற 23 வயது இளைஞன் மீது, ஆவாக் குழுவினர் வாள்வெட்டு மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளொன்றில் வந்த மூவரே, இந்தத் தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X