Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 24 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் தற்போது திருந்தி சமூகத்தில் நல்ல பிரஜைகளாக வாழ்ந்து வருவதாகத் தெரிவித்த வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசாந்த் பெர்ணான்டோ, அந்த பெருமையுடன் வடக்கில் இருந்து செல்வதாகவும் கூறினார்.
வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி வந்த வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசாந்த் பெர்ணான்டோ, தென் மாகாணத்துக்கு இடமாற்றம் பெற்று செல்லவுள்ளார். இந்நிலையில் காங்கேசன்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஊடகவியலர்களை சந்தித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், வடக்கு மாகாணம் போருக்கு பின்னர் அமைதியாக இருந்தது. பின்னர் சில இளைஞர்கள் குழுக்களாக இணைந்து வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். அவ்வாறான இளைஞர் குழுக்களுக்கு ஒவ்வொரு பெயர்களும் இருந்தன. இதனால் வடக்கில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பணத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அரங்கேறின எனத் தெரிவித்தார்.
இந்த குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பல பொலிஸ் குழுக்கள் நியமிகப்பட்டதாகத் தெரிவித்த அவர், அவர்கள் வன்முறையில் ஈடுபட்ட அதற்கு உதவிய நபர்களை கைது செய்ததாகவும் கூறினார்.
எனினும் அவர்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்க யாரும் வருவதில்லை. அதனால் வெளியில் வந்து விடுகின்றனர். அவ்வாறு வருபவர்கள் தாம் இனிமேல் இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபடமாட்டோம் என உறுதியளித்துள்ளனர். அத்துடன் அவர்கள் திருந்தி வாழ்ந்தும் வருகின்றனர்.
தற்போதும் ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆனால் தொட்டதுக்கு எல்லாம் அவர்களை நாம் கைது செய்யமுடியாத நிலை உள்ளது. ஏனெனில், உரிய ஆதாரம், சாட்சியத்துடன் நாம் கைது செய்ய வேண்டிய தேவைகள் இருக்கின்றன. வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக நாம் குற்றச் செயல்களில் ஈடுபடாதவர்களை கைது செய்ய முடியாது. எனவும் அவர் தெரிவித்தார்.
எது எவ்வாறாயினும், யாழ்ப்பணத்தில் அரங்கேறிய வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தமை, குற்றங்களை கட்டுப்படுத்தியமை அதற்கும் அப்பால் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது திருந்தி வாழ்கின்றனர். அவ்வாறு வாழ்பவர்களின் பெற்றோர்கள் எமக்கு தொடர்பை ஏற்படுத்தி மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். இந்த மன நிறைவுடன் வடக்கை விட்டு செல்வதாகவும் அவர் மேலும் கூறினார்.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago