எஸ்.என். நிபோஜன் / 2018 மே 05 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜிதா
சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றவளைப்பின்போது, ஆவாக்குழுவைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் நேற்று (04) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், கைதடி, நுணாவில், வவுனியா பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்நு 4 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுன்னாகம் பகுதியில் வாள் வெட்டை மேற்கொள்வதற்கு எத்தணித்த போதே, குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் பல வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், கைதுசெய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago