Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 29 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், டி.விஜித்தா,எஸ்.நிதர்ஷன்
பின்தங்கிய பிரதேசங்களில் வாழ்ந்துவரும் மக்கள், அலைபேசி இணைப்பு ஊடாக பணப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கான நிதி உதவியை, அவுஸ்திரேலியா அரசாங்கம் வழங்கியுள்ளதென, யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவித்ததாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.
வடக்கின் நிலமைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு, யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரின் ஹஸ்டன் தலைமையிலான குழுவினருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று, கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பு தொடர்பில், ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த
முதலமைச்சர்,
“ஏரிஎம், சிடிஎம் இயந்திரங்கள் ஊடாக பணத்தை மீளப்பெறல் மற்றும் வைப்பிலிடலைப் போன்றே, இந்த அலைபேசி இணைப்பின் ஊடான பணப் பரிமாற்றமும் இடம்பெறும்.
“இவ்வாறான நிலையங்கள் 200, யாழில் அமைக்கப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக 20 அமைக்கப்படவுள்ளன” என்றார்.
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago