2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

இணையத்தளம் அங்குரார்ப்பணம்

Niroshini   / 2017 ஜனவரி 24 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்சன்

வடக்கு மாகாணத்திலும்,  மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடமிருந்து, வாகன வருமானவரி பத்திரத்தை இணையம் மூலமாக பெற்றுக்கொள்ளும் செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, யாழ் நூலக மாநாடு மண்டபத்தில் திங்கட்கிழமை  இடம்பெற்றது.

வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற குறித்த அங்குரார்ப்பண நிகழ்வில், வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் கலந்துகொண்டார்.

இணையதளத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்த அவர், இணையம் மூலமான முதலாவது வாகன வரி அனுமதிப்பத்திரத்தை வழங்கியும் வைத்தார்.

நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள், அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X