2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்கள் 10 பேர் கைது

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பருத்தித்துறைக்கு அண்மித்த கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 10 பேர்  இன்று வியாழக்கிழமை (10) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத்துறைத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தமிழக, இராமநாதபுரம் பகுதியிலிருந்து படகொன்றில் கடலுக்குச் சென்ற மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை, கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .