2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் 31 பேர் யாழில் உண்ணாவிரதம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜெகநாதன்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ள இந்திய மீனவர்களும் 31 பேரும் தம்மை விடுதலை செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

இந்திய தமிழகம் தங்கச்சிமடம், இராமேஸ்வரம், கோட்டைப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 31 மீனவர்களே, யாழ். சிறைச்சாலையில் நேற்று (13) முதல் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

கடந்த பல மாதங்களாக தாம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தமது குடும்பங்களை இழந்து பல சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

அத்துடன், கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது படகுகளை விடுவிக்குமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

தமது விடுதலையை வலியுறுத்தி முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் குறித்து, யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் இந்திய துணைத்தூதுவருக்கும் மகஜர் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X