2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

இந்திய வியாபாரிக்கு அபராதத்துடன் கூடிய சிறை

Princiya Dixci   / 2017 ஜனவரி 04 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய வியாபாரிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் ஒரு வருட சாதாரண சிறைத்தண்டனையும் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி கந்தசாமி, இன்று (04) உத்தரவிட்டார்.

கடந்தமாதம் 28ஆம் திகதி பருத்தித்துறை பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியப் பிரஜையினைப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இதன்போது கடந்த 24ஆம் திகதியுடன் அவருடைய விசா காலாவதியாகியிருந்தது.
குறித்த வியாபாரியை நீதிமன்றில் முற்படுத்திய போது, இன்றுவரை (புதன்கிழமை (04) விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் மீண்டும் இன்று நீதிமன்றில் முற்படுத்திய போது நீதவான் அதிகூடிய அபராதம் விதித்ததுடன், 1 வருட சாதாரண சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X