2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Freelancer   / 2022 ஏப்ரல் 13 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 20 பேரும் நேற்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீட்டித்து ஊர்காவற்றுறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.

இதனிடையே, எதிர்வரும் 18 ஆம் திகதி இந்திய மீனவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் குறிப்பிட்டார்.

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 20 இந்திய மீனவர்கள் வெவ்வேறு தினங்களில் கைது செய்யப்பட்டிருந்தனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X