Niroshini / 2021 ஜனவரி 05 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேரையும், எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்றுறை நீதிமன்றம், நேற்று உத்தரவிட்டுள்ளது
கடந்த மாதம் முற்பகுதியில் நெடுந்தீவுக்கு மேற்கே 3 விசைப்படகுகளை வந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 22 பேர், காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்
குறித்த மீனவர்கள் தொடர்பான வழக்கு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ந்து மூன்று தவணைகளாக இடம்பெற்று வருகின்றது.
குறித்த மீனவர்கள் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த மீனவர்கள் கடற்படையினரின் பாதுகாப்புடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், மீனவர்களை தொடர்ந்து தனிமைப்படுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார்.
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025