Editorial / 2020 ஜனவரி 20 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன், பிரதீபன்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட முயன்றபோது, படகு கவிழ்ந்து, இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட 4 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஜூட்சன், நேற்று (19) உத்தரவிட்டார்.
குறித்த மீனவர்களை நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுது்தியபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நெடுந்தீவு கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்களின் படகு, சீரற்ற வானிலை காரணமாக, கடலில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், அந்தப் பகுதியில் ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 4 மீனவர்களையும் காப்பாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
17 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago