2025 மே 03, சனிக்கிழமை

இந்திய மீனவர்களை சந்திக்க நீதவான் அனுமதி

Niroshini   / 2021 நவம்பர் 02 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ். தில்லைநாதன்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை, இந்திய தூதரக அதிகாரிகள் பார்வையிடுவதற்கும் இந்தியாவிலுள்ள உறவினர்களுடன் உரையாடுவதற்கும், பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை அனுமதி வழங்கினார்.

கடந்த 14ஆம் திகதி, வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

 இந்த வழக்கு, நேற்று  (01) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மீனவர்கள்   சார்பில் சட்டத்தரணி லோ.குகதாசன் ஆஜராகியிருந்தார்.

அவரின் சமர்ப்பணத்தை ஏற்ற நீதவான், மேற்படி இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்களை பார்வையிடுவதற்கும், இந்தியாவில் உள்ள உறவினர்களுடன் தொலைபேசியில் உரையாடுவதற்கும், அவர்களுக்கான ஆடைகளை  வழங்குவதற்கும் நீதவான் அனுமதி வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X