Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், டி.விஜிதா
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த எட்டு மீனவர்களை, கடற்படையினர், நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
இராமேஸ்வரம் பாம்பன், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த எட்டு மீனவர்களும் நேற்றிரவு நெடுந்தீவு கடற்பரப்பினுள் மீன்பிடியில் ஈடுபட்டு இருந்த வேளையிலேயே, கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட எட்டு மீனவர்களையும் யாழ். மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் கடற்படையினர் இன்று மதியம் ஒப்படைத்துள்ளனர்.
எட்டு மீனவர்களையும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்க்கான நடவடிக்கைகளை, நீரியல் வளத்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை காரணமாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் , அவர்களை கடற்படையினர் கட்டுப்படுத்தவில்லை எனவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடமாகாணத்தை சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் வடமாகாண ஆளுனரை நேரில் சந்தித்து முறையிட்டு இருந்தனர்.
அது தொடர்பில் தான் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக, வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
34 minute ago
58 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
58 minute ago
3 hours ago
7 hours ago