2025 மே 19, திங்கட்கிழமை

இந்திரகுமார் விடுதலை

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் நிரபராதியாக தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிரான பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கை சட்ட மா அதிபர் திணைக்களம் மீளப்பெற்றுக்கொண்டது.

அதனால் சுமார் 14 மாதங்களின் பின்னர் அந்த வழக்கிலிருந்தும் பூபாலசிங்கம் இந்திரகுமார் விடுவிக்கப்பட்டார்.

அத்துடன், அவர் சுமார் 3 ஆண்டுகள் 6 மாதங்கள் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு இன்று (03) விடுவிக்கப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முதலாவது சந்தேகநபரான பூபாலசிங்கம் இந்திரகுமார் நிரபராதி என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற சிறப்பு நீதாய விளக்கம், கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி தீர்ப்பளித்து விடுவித்தது.

எனினும்  மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சாட்சியான பொலிஸ் உத்தியோகத்தரான கோபி என்பவருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டு பூபாலசிங்கம் இந்திரகுமார் மீது பொலிஸாரால் முன்வைக்கப்பட்டது. அந்த வழக்கு கடந்த 14 மாதங்களாக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வந்தது.

இந்த நிலையில் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  சட்ட மா அதிபர் திணைக்கள அரச சட்டவாளர் மன்றில் முன்னிலையானார். பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிரான வழக்கை மீளப்பெறுவதாக மன்றில் விண்ணப்பம் செய்தார். அதனால் அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் பூபாலசிங்கம் இந்திரகுமார் இன்று விடுவிக்கப்பட்டார்.

You May Also Like

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X