2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இந்துக் கல்லூரி அதிபரால் மாணவர்களுக்கு உதவி

Editorial   / 2020 மே 25 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் சாதாரண தரம், உயர் தரம் மாணவர்களில் நிகழ்நிலைக் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான மடிக்கணினி, வரைபட்டிகை (ரப்லெட்), திறன்பேசி (ஸ்மார்ட் போன்) வசதிகளைக் கொண்டிராத, வசதி குறைந்த மாணவர்களுக்கு, கல்லூரியின் அதிபர் இரட்ணம் செந்தில்மாறனால், மடிக்கணினிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானியக் கிளையின் நிதி அனுசரணையில், 1.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான 60 மடிக்கணினிகள் (வரைபட்டிகைகள்) பாடசாலைக்காக கொள்வனவு செய்யப்பட்டு,  பின் தங்கிய, உயர்தர மற்றும் சாதரண தர மாணவர்களுக்கு இரவலாக வழங்கப்படவுள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X