2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இன்றும் அறிக்கைகள் சமர்பிக்கப்படவில்லை

Niroshini   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கின் சான்று பொருட்களின் ஆய்வு அறிக்கையானது இன்று திங்கட்கிழமை (28) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை.

சந்தேகநபர் ஒருவரின் இரத்த கறையுடன் கூடிய காற்சட்டையின் இரத்த மாதிரி மாணவியின் இரத்த மாதிரியுடன் ஒத்துப்போகின்றதா என்ற அறிக்கை, ஜின்டெக் நிறுவனத்தின் பரிசோதனை அறிக்கை, சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் மூக்குக்கண்ணாடி ஆய்வு அறிக்கை, விந்து மாதிரியின் அறிக்கை, மாணவியின் தாயின் இரத்த மாதிரி அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் இன்னமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இதேவேளை,இந்தக் கொலை வழக்குத் தொடர்பில் விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கூறப்பட்டபோதும் இன்னமும் நடைபெறப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X