2025 ஜூலை 23, புதன்கிழமை

இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாக டிசெம்பர் 26 பிரகடனம்

Niroshini   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாக டிசெம்பர் 26ஆம் திகதி வட மாகாண சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபை அமர்வின் இரண்டாவது நாளான புதன்கிழமை (16) வட மாகாண விவசாய, சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இது தொடர்பான பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றியிருந்தார்.

அவர் தனது உரையில்,

காலநிலை மாற்றங்களால் வருங்காலத்தில் இலங்கையும் பேரிடர்களைச் சந்திக்கும் என்று ஆய்வாளர்களால் எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, வடக்கின் தலைப்பகுதியான யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கடல் காவுகொள்ளும் என்றும் எச்சரிக்கப்படுகின்றது.

இயற்கையின் சீற்றம் தவிர்க்கமுடியாததொன்று. ஆனால், இயற்கைக்கு முரணான, எதிரான எமது நடவடிக்கைகளைத் தவிர்த்துக்கொள்வதன் மூலம் இயற்கையின் சீற்றத்தைத் தணித்துப் பேரழிவுகளிலிருந்து எம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

அவ்வாறு தணிப்பதற்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் ஆகும். இதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக வடமாகாணத்துக்கென இயற்கைப்பேரிடர் தணிப்புத்தினம் ஒன்றைப் பிரகடனப்படுத்தி, ஆண்டுதோறும் கடைப்பிடிப்பது காலப்பொருத்தமானது எனக் கருதுகிறேன்.

எனவே,கடற்கோள் தாக்கிய தினமான டிசெம்பர் 26ஆம் திகதியை வடமாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாகப் பிரகடனப்படுத்துவதற்கு சபையின் அங்கீகாரத்தைக் கோருகின்றேன் என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .