2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’இயற்கை சமநிலையை ஏற்படுத்த வேண்டும்’

Editorial   / 2020 ஜூன் 09 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், இயற்கை சமநிலையை ஏற்படுவதற்கு அனைவரும் முன்வர வேண்டுமென, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர். க. மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், இன்று (09) நடைபெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இந்தச் சுற்றாடல் தினத்தை நினைவு கூருவது மட்டுமல்லாது, யாழ். குடாநாட்டில் எவ்வாறு சூழல் சமநிலையை பாதுகாக்க வேண்டுமென்ற உறுதிபாட்டையும் எடுக்க வேண்டுமென்றார்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது இலங்கை இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொள்வதில், 4ஆவது இடத்தில் இருந்து 3ஆவது இடத்துக்கு முன்னேறியிருப்பதாகவும், மகேசன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X