2025 ஜூலை 19, சனிக்கிழமை

இராணுவச் சிப்பாய் மீது தாக்குதல்

Niroshini   / 2016 ஜனவரி 06 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

கைதடி, கோப்பாய் வீதியில் அமைந்துள்ள பாலத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (05) இரவு 8.30 மணியளவில், இராணுவச் சிப்பாய் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை படை முகாமில் கடமையாற்றும், மறவன்புலத்தைச் சேர்ந்த சிவராசா சிவதாஸ் (வயது 30) என்பவர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இத்தாக்குதலில் காயமடைந்த சிப்பாய் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X