2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இரண்டு கொள்ளையர்கள் கைது

Gavitha   / 2016 ஜனவரி 03 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு பிரதான சந்தேக நபர்களை, சனிக்கிழமை (02) மாலை கைது செய்ததாக, வல்லெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள், வல்வெட்டித்துறை ஆதிகோயிலடி பகுதியில் வைத்து 16 மற்றும் 20 வயதுடைய சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில், கடந்த மாதம் மருந்தகம் ஒன்று உடைக்கப்பட்டு,  அங்கிருந்த பால்மா பொருட்கள், பிஸ்கட் வகைகள் என்பன திருடப்பட்டிருந்தன. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், குறித்த கடையில் இருந்த சீ.சீ.டீ.வீ கமெராவில் பதிவாகியிருந்தது.

இந்த ஆதாரத்தை அதில் அடங்கியிருந்த காட்சிகளை பொலிஸார் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தியிருந்தனர்.

பின்னர், பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து சந்தேக நபர்களை அவர்களது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இது வரை சுமார் 8 கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X