Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2017 ஓகஸ்ட் 31 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரணைதீவு மக்கள் தாம் குடியிருந்த பகுதிகள் என அடையாளப்படுத்தும் பகுதிகளை, எதிர்வரும் வாரம் அளவீடு செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – பூநகரி - இரணைதீவு மக்கள் தமது பூர்வீக நிலத்தை விடுவிக்கக் கோரி, கடந்த மே மாதம் 1ஆம் திகதி முதல் முழங்காவில் இரணைமாதா நகரில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று(31) பூநகரி பிரதான கடற்படை பணியகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன கலந்துகொண்டார்.
இக்கலந்துரையாடலின்போதே, இரணைதீவு மக்கள் தாம் குடியிருந்த பகுதிகள் என அடையாளப்படுத்தும் பகுதிகளை எதிர்வரும் வாரம் அளவீடு செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
இதன்போது, இரணைதீவில் கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பாதீவு, இரணைதீவு, கற்கடதீவு ஆகிய 3 தீவுகளை உள்ளடக்கி 2,000 ஏக்கர் நிலப்பகுதி உள்ளதாக, பூநகரி பிரதேச சபையால் தெரிவிக்கப்பட்டது.
இதில் அண்ணளவாக 1100 ஏக்கர் நிலப்பகுதி, இரணைதீவாக உள்ளது. இரணைதீவில் 186 ஏக்கர் பகுதியில் மக்கள் குடியிருந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், “இரணைதீவு வடக்கு பகுதி தமக்கு தேவையாக உள்ளது. அங்கு இராடர்கள் பொருத்தப்பட்டுள்ளது” என, கடற்படையினர் தெரிவித்தனர்.
இதையடுத்தே, தற்போது பொதுமக்களின் இடங்களை அளவீடு செய்யுமாறு, தெரிவிக்கப்பட்டது.
2 hours ago
2 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
19 Jul 2025